ஆன்லைன் கேம்கள் ஆபத்தானதா?

 ஆன்லைன் கேம்கள் ஆபத்தானதா?



கொரோனா பரவலின் காரணமாக பலரும்  வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். நம் வீட்டு சுட்டிகளும் வீட்டில் இருந்த படியே பள்ளிப் பாடங்களை ஆன்லைன் மூலம் படித்து வருகின்றனர். பாதுகாப்பான சூழல் ஏற்படாத காரணத்தால், சிறுவர்களை விளையாடுவதற்கு வெளியே அனுப்புவதிலும் தயக்கம் இருக்கிறது.


தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போரடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல், மனநல பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, பல குற்றங் களுக்கும் வழி வகுப்பதாக அமைந்து விடுகிறது.


ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதே சமயம், பள்ளி பாடங் களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால், அவர்கள் ஆன்லைன் விளையாட்டு களில் ஈடுபடுவதை பல சமயங்களில் தடுக்க முடிவதில்லை. சில நேரங்களில் விடலைப் பிள்ளை களை கண்டிப்பது விபரீதத்தில் கூட முடிகிறது.



'ஆன்லைன் கேம்கள்' எனப் பொதுவாகக் கூறினாலும்,


குறிப்பிட்ட விபரீதமான விளையாட்டுகளையே மாணவர்கள் அதிகம் விளையாடுகின்றனர். இவ்வகை விளை


யாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது. பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து, நாளடைவில் அதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கவனச் சிதறல், மன அழுத்தம், படபடப்பு போன்ற மன நோய்களுக்கும், கோபம், பதற்றம் போன்ற நடத்தை சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர்.


ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் ஆர்வத்தில் மொபைலை மிக அருகில் வைத்துக் கொள்கின்றனர். இதனால் கண்கள் பாதிக்கப்படும். சரியான கோணத்தில் அமராதபோது கழுத்துவலி, முதுகுவலி, உறக்கம் கெடுவதால் மலச்சிக்கல், தலைவலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.


தேவையற்ற நேரத்தில் கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலக்க வேண்டும். இதனால் அவர்கள் கோபப்பட்டாலும், சோர்வாக நடந்து கொண்டாலும் சலுகை அளிக்கக்கூடாது. மாறாக, அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். மாற்று வழிகளைக் காண்பிக்க வேண்டும். திரும்பவும் விளையாடத் தோன்றும் போதெல்லாம், 'இது தவறு' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.


Thank you for reading and spend your time


Please support and follow vasim tamizha blog and youtube channel and instagram id follow us get more informations

Vasimtamizhan.blogspot.com

❤️Thank you❤️






Previous Post Next Post